உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செங்குன்றம் அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற அரசு வாகனம்

செங்குன்றம் அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற அரசு வாகனம்

சோழவரம்:இலகு ரக வாகனம் ஓட்டத்தெரிந்தாலும், சொந்த வாகனம் இல்லாத நிலையில், அவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு, தனியார் பயிற்சி பள்ளியை நாடவேண்டும். அங்கு வாகனம் ஓட்டத்தெரிந்திருந்தாலும், முழு பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டும்.இதை தவிர்க்கும் பொருட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஏதுவாக தமிழக அரசு 'தேர்வு வாகனம்' வழங்கி உள்ளது.கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், மாநிலம் முழுதும் உள்ள, 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும், 54 மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள், என மொத்தம், 145 அலுவலகங்களில் இந்த வாகனம் வழங்கப்பட்டு உள்ளது.ஆய்வாளர் இருக்கை பகுதியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் உள்ளது போல் கூடுதல் ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் இணைப்புகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டு உள்ளன.தற்போது செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள செங்குன்றம் வட்டார போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் தெரிவித்ததாவது:தமிழக அரசால் கடந்த ஆண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சொந்த வாகனம் இல்லாதவர்கள் இனி நண்பர்கள், உறவினர், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை தேடி அலைய வேண்டியதில்லை. வாகனம் இயக்க தெரிந்திருந்தால் மட்டும் போதும். உரிமம் பெறுவதற்கு இந்த தேர்வு வாகனத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.இதற்காக கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்கப்படும். தேவையான அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ