உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சரளை கற்கள் பெயர்ந்து சாலை கரடு முரடு தேவதானத்தில் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சரளை கற்கள் பெயர்ந்து சாலை கரடு முரடு தேவதானத்தில் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பொன்னேரி:பொன்னேரி - தேவதானம் சாலையில், தேவதானம் ஏரி அருகே உள்ள கான்கிரீட் சாலை பராமரிப்பு இன்றி கிடக்கிறது.அப்பகுதியில் சரளை கற்கள் பெயர்ந்து, கரடு முரடாகவும், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். இந்த சாலை வழியாக, பி.என்.கண்டிகை, கே.என். கண்டிகை, சிருளப்பாக்கம், வெள்ளகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் தேவதானம் சென்று வருகின்றனர்.அதேபோன்று, காணியம்பாக்கம், தேவதானம், வேளூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பொன்னேரி வந்து செல்லவும் இதன் வழியாக பயணிக்கின்றனர்.சாலை சேதமடைந்து இருப்பதால், இரவு நேரங்களில் பைக்கில் செல்பவர்கள் சரளை கற்களில் சிக்கி விழுந்து சிறு சிறு விபத்துகளுக்கு உள்ளாகின்றனர்.பொன்னேரி பகுதியில் இருந்து தேவதானத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலுக்கு, சனிக்கிழமைகளில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மேற்கண்ட கிராமவாசிகளும், தேவதானம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்பவர்களும் சேதமடைந்து கிடக்கும் இந்த சாலையில் சிரமத்துடன் பயணிகின்றனர்.மேற்கண்ட சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை