உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெஜ் பிரியாணியில் பூரான் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

வெஜ் பிரியாணியில் பூரான் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

திருவொற்றியூர்:'வெஜ் பிரியாணி'யில் பூரான் இறந்து கிடந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருவொற்றியூர், காலடிப்பேட்டை மார்க்கெட் லேன் பகுதியில் செயல்படும் டிபன் கடை ஒன்றில், நேற்று முன்தினம் மாலை, பெண் ஒருவர் வெஜ் பிரியாணி வாங்கியுள்ளார். அதை வீட்டிற்கு கொண்டு சென்று பார்த்த போது, அதில் பூரான் இறந்து கிடந்துள்ளது.அதிர்ச்சியடைந்த அப்பெண், கடைக்காரரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வெஜ் பிரியாணியை திருப்பிக் கொடுத்துள்ளார்.இதுகுறித்து அறிந்த மற்றவர்களும், தாங்கள் வாங்கிச் சென்ற வெஜ் பிரியாணியை திருப்பிக் கொடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.இதுகுறித்த தகவலறிந்த உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய அதிகாரி செல்வராஜ், கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, கடை உரிமமின்றி செயல்படுவது தெரிந்தது. பின், முறையாக உரிமம் பெற்று, சுகாதாரமான உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டுமென, கடை உரிமையாளரை அதிகாரி கடுமையாக எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை