உள்ளூர் செய்திகள்

மனிதநேய வார விழா

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மனித நேய வார நிறைவு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாட்கோ மேலாளர் இந்திரா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி முன்னிலை வகித்தனர்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்