உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தலக்காஞ்சேரியில் விதிமீறிய சவுடு மண் குவாரி நிறுத்தம்

தலக்காஞ்சேரியில் விதிமீறிய சவுடு மண் குவாரி நிறுத்தம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், மாமல்லபுரம் - காட்டுப்பள்ளி வெளிவட்ட சாலை, சித்துார் - தச்சூர் மற்றும் திருவள்ளூர் - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், எண்ணுார் அனல்மின் நிலையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன.அரசு பணிகளுக்காக சவுடு மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரியில், திருவளளூர் - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக, மண் எடுக்க மாவட்ட கனிம வளத்துறை அனுமதி அளித்தது.அதற்காக, கடந்த டிச., 31 முதல் வரும் 30ம் தேதி வரை சவுடு மண் எடுத்துக் கொள்ள அனுதி பெறப்பட்டது. இந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு மண் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.கடந்த வாரம் கனிமவள துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில், அதிகளவு மண் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததால், உடனடியாக சவுடு மண் குவாரி நிறுத்தம் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி