மேலும் செய்திகள்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
14 hour(s) ago
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
14 hour(s) ago
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்மர் மலைக்கோவில். இது, 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த மலைக்கு கிழக்கில், சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார். யோக நரசிம்மர் அருள்பாலிக்கும் பெரிய மலைக்கு, 'ரோப் கார்' வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரோப் கார் வளாகத்திற்கு செல்லும் சாலையில், மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை வீசி செல்கின்றனர். ஆன்மிக தலத்தில், இது போன்ற அநாகரிகமான செயலால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர். மதுபிரியர்களை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் ஹிந்து அறநிலைய துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago