உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூட்டு குடிநீர் குழாய்கள் நல்லாட்டூரில் துவக்கிவைப்பு

கூட்டு குடிநீர் குழாய்கள் நல்லாட்டூரில் துவக்கிவைப்பு

திருத்தணி,:திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூரில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில், தமிழக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஜல்- ஜீவன் திட்டம், 2022 - -23ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 2.60 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, ஆற்றில் மூன்று கிணறுகள் அமைத்து, அதில் தேங்கும் தண்ணீரை, குழாய்கள் மூலம் கொசஸ்தலை ஆற்றின் கரைக்கு கொண்டு வந்து மின்மோட்டார்கள் மூலம் நல்லாட்டூர், பூனிமாங்காடு மற்றும் என்.என்.கண்டிகை ஆகிய ஊராட்சிகளுக்கு வினியோகம் செய்யும் வசதி ஏற்படுத்தியது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், கடந்த ஜன., 7ம் தேதி காணொலி காட்சி வாயிலாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதை தொடர்ந்து, ஊராட்சிகளில் குழாய்கள் அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, கூட்டு குடிநீரை குழாய்கள் மூலம் திறந்து வைத்தார். இதில், தமிழக குடிநீர் வாரிய அதிகாரிகள், நல்லாட்டூர் ஊராட்சி தலைவர் கலையரசி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்