கடம்பத்துா:கடம்பத்துார் ஒன்றியம், ஏகாட்டூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், 1.60 கோடி ரூபாய் மதிப்பில், 2015 --- 16ல், நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.கடந்த 2018ல், பயன்பாட்டிற்கு வந்த புதிய பள்ளி கட்டடத்தில், மூன்று தளங்கள், ஐந்து வகுப்பறைகள், தலா, ஒரு தலைமையாசிரியர் அறை, அலுவலகம், ஓவியம், நுாலகம், ஆய்வகம், கணினி அறிவியல் மற்றும் ஆசிரியர்களுக்கான அறை என, மொத்தம், 12 அறைகள் உள்ளன. சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில், 'குடி'மகன்களின் கூடாரமாக மாறி வந்த பள்ளிக்கு கடந்த 2021ம் ஆண்டு 7 லட்சம் ரூபாயில், பள்ளியின் முன்புறம் மட்டும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. சுற்றுச்சுவர் முழுமை பெறாததால் இரவு நேரங்களில் 'பார்' ஆக மாறி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.எனவே, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை முழுமைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.