உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இந்தியன் வங்கி கூரை பெயர்ந்து வாடிக்கையாளர்கள் மூவர் காயம்

இந்தியன் வங்கி கூரை பெயர்ந்து வாடிக்கையாளர்கள் மூவர் காயம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு காவல் நிலையம் அருகே இயங்கி வருகிறது இந்தியன் வங்கி.இந்த வங்கியில், மப்பேடு மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். நேற்று காலை 11:30 மணிளவில், திடீரென வங்கியின் கூரை கான்கிரீட் பூச்சு சேதமடைந்து கீழே விழுந்தது. இதில் வங்கிக்கு நகை கடன் மற்றும் முதியோர் உதவித்தொகை பெற வந்த காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன வளர்புரம் பகுதியைச் சேர்ந்த ஜோஸ்பின், 64, மப்பேடு பகுதியைச் சேர்ந்த மணி, 60, வயலுார் பகுதியைச் சேர்ந்த பார்வதி, 65, ஆகிய மூவரும் காயமடைந்தனர்.அவர்கள் மப்பேடு பகுதியில் உள்ள சவீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை