உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓடைக்கால்வாயை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

ஓடைக்கால்வாயை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த, பெரியகாவணம் பகுதியில் இருந்து, மடிமைகண்டிகை, வீரங்கிமேடு வழியாக ஆசானபூதுார் மற்றும் வஞ்சிவாக்கம் ஏரிகளுக்கு செல்லும் ஓடைக்கால்வாய் துார்வாரப்படாமல் இருக்கிறது.கால்வாய் முழுதும் செடி, கொடிகள் சூழ்ந்து உள்ளன. விவசாய நிலங்களும் கரைகளும் சம அளவில் இருக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் கால்வாயில் செல்லும் மழைநீர், கரைகள் இல்லாத பகுதிகள் வழியாக வெளியேறி விளைநிலங்களை மூழ்கடிக்கிறது. இதனால் நெற்பயிர்கள் பாதிக்கின்றன.கால்வாயை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தினால் அதிகளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியும் எனவும், நெற்பயிர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், அதற்கு முன் மேற்கண்ட கால்வாயை சீரமைக்க நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி