| ADDED : பிப் 16, 2024 10:15 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர் ஒன்பது பேர், டெல்லியில் நடந்த சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்றனர். கடந்த 7 ம் தேதி முதல் 11ம் தேதி வரை பல்வேறு பிரிவுகளாக நடந்த போட்டியில் அம்மையார்குப்பம் ஜாக் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர் கிஷோர் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம், ஜனனி தங்க பதக்கம், காவியாஸ்ரீ மற்றும் யுகேஷ் தலா இரண்டு தங்க பதக்கம், ஞானதீப்தி தங்கம் மற்றும் வெள்ளி, பிரியதர்ஷிணி வெள்ளி மற்றும் வெண்கலம், பிரவீன் மற்றும் ஜெய் சீனிவாசன் தலா ஒரு வெள்ளி பதக்கம், சாய்கிரண் வெண்கல பதக்கம் பெற்றனர். மாணவர்களை அரசு மேல்நிலைப் பள்ளி பயிற்சி ஆசிரியர் ஆஞ்சநேயன், ஜாக் விளையாட்டு அகாடமி பயிற்சியாளர் மோகன்ராஜ் மற்றும் கிராமத்தினர் பாராட்டினர்.