மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
22 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
22 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
22 hour(s) ago
திருத்தணி:திருத்தணி நகரில் இயங்கி வரும் பூ மார்க்கெட்டிற்கு, தாழவேடு, சத்திரஞ்ஜெயபுரம், பட்டாபிராமபுரம், மேதினாபுரம், வேலஞ்சேரி, கோபாலபுரம், அருங்குளம், நெமிலி உள்பட, 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, சாமந்தி, கனகம்பரம், மல்லி, முல்லை, ஜாதிமல்லி உட்பட பல்வேறு மலர்கள் சாகுபடி செய்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.இந்த பூ மார்க்கெட்டில் இருந்து, சென்னை, திருவள்ளூர், வேலுார் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களுக்கு செல்கிறது. இந்நிலையில் பனிப்பொழிவு, தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் மல்லிகை பூ விளைச்சல் குறைந்து விட்டது.கடந்த மாதம் மல்லிகை பூ ஒரு கிலோ, 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த நான்கு நாட்களாக மல்லிகை பூ திருத்தணி மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால், 2,000 முதல் 2, 500 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.இதுகுறித்து பூ, மார்க்கெட் வியாபாரி கோபி கூறுகையில், ''தற்போது மல்லிகை பூ செடிகள் பராமரிப்புக்காக செடிகளை கிளைகளை வெட்டியும், ஏர் உழுது உரங்கள் விவசாயிகள் போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர சில நாட்களாக பனிப்பொழிவு அதிகம். மேலும் அவ்வப்போது மழை பெய்வதால் மல்லிகை வரத்து குறைவு. இதனால் தான் தற்போது ஒரு கிலோ மல்லி, 2,500 ரூபாய்க்கு வாங்கி விற்பனை செய்கிறோம்'' என்றார்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago