மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
25-Nov-2024
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: இருவர் கைது
04-Dec-2024
மணவாள நகர், கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி, மணவாள நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வினித்குமார், 32; டி.சி.எஸ்., நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவர், நேற்று காலை, பெற்றோருடன் சென்னைக்கு சொந்த வேலையாக சென்று விட்டார்.பின், மாலை 5:30மணியளவில், வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டனர். பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, 2.5 லட்சம் ரூபாய் பணம், 15 சவரன் தங்க நகை திருடப்பட்டது தெரிய வந்தது.மணவாளநகர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.இதேபோல, வரதராஜநகர் பகுதியிலும் இரு வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு கவரிங் நகைகளை திருடிச் சென்றதாக பகுதிவாசிகள் தெரிவித்தனர்.
25-Nov-2024
04-Dec-2024