விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலையில், ரத்தினபுரி செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை செல்வ விநாயகர், லஷ்மி ஷயக்ரீவர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.இதை தொடர்ந்து சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், கவரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.