உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடிப்பூண்டி மாணவர்கள் யோகாவில் சாம்பியன் பட்டம்

கும்மிடிப்பூண்டி மாணவர்கள் யோகாவில் சாம்பியன் பட்டம்

கும்மிடிப்பூண்டி:கோவையில் இயங்கி வரும் சத்குரு யோகா வித்யாலயம் சார்பில், கடந்த வாரம், தென்மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடந்தன. அதில், ஆந்திரா, தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, 1,350 பேர் பங்கேற்றனர்.கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் கைரளி யோகா வித்யாபீடம் மாணவர்கள், அதன் பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில், 16 பேர் போட்டியில் பங்கேற்றனர். அவர்களில், ஆண்கள் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தை கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த ஆர்.லோகேஷ், 14, பெண்கள் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தை எம்.கே.லத்திகாஸ்ரீ, 12, ஆகியோர் பெற்றனர். இந்த போட்டியில், கைரளி யோகா வித்யாபீடம், ஒட்டுமொத்த வெற்றியாளர்களுக்கான சிறப்பு பட்டத்தை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை