உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரைகுறையாக சாலை பணி லட்சுமிபுரம் பகுதியினர் தவிப்பு

அரைகுறையாக சாலை பணி லட்சுமிபுரம் பகுதியினர் தவிப்பு

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் லட்சுமிபுரம் கிராமம், பெருமாள் கோவில் தெரு முதல் மற்றும் இரண்டாவதில், 'ஹாலோ பிளாக்' சாலை அமைப்பதற்காக, கடந்த, நான்கு மாதங்களுக்கு முன், இருபுறமும் கான்கிரீட் கட்டுமானம் அமைக்கப்பட்டது.நான்கு மாதங்கள் முடிந்த நிலையில் இதுவரை இரண்டு தெருக்களிலும் கான்கிரீட் கட்டுமானங்களுக்கு இடையே சாலை அமைக்கப்படவில்லை.இதனால் மழைக்காலங்களில் கான்கிரீட் கட்டுமானங்களுக்கு இடையே மழைநீர் தேங்குகிறது.ஒவ்வொரு வீட்டின் நுழைவுப்பகுதியிலும், இருக்கும் கான்கீரிட் கட்டுமானத்தால் வாகனங்கள் வீட்டிற்குள் கொண்டு செல்வதற்கும், வெளியில் எடுப்பதற்கும் கிராமவாசிகள் சிரமப்படுகின்றனர்.அரைகுறையாக விடப்பட்ட சாலைப்பணிகளால் கிராமவாசிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.இது குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இன்றி உள்ளது.அரைகுறையாக விடப்பட்ட சாலைப்பணிகளை முழுமையாக முடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ