உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கழிவுநீர் குட்டை அருகே நுாலகம், பஸ் நிறுத்தம்

கழிவுநீர் குட்டை அருகே நுாலகம், பஸ் நிறுத்தம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி திரவுபதியம்மன் கோவில் எதிரே குட்டை உள்ளது. இந்த குட்டையின் அருகே, பயணியர் நிழற்குடை மற்றும் கிளை நுாலகம் இயங்கி வருகிறது.இந்நிலையில், புச்சிரெட்டிப்பள்ளியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த குட்டையில் தேங்கி நிற்கிறது.இதனால், துர்நாற்றம் வீசுவதால், கிளை நுாலகத்திற்கு வரும் வாசகர்கள் மற்றும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.குட்டையில் கழிவுநீர் செல்வதை தடுக்காமாலும், கழிவுநீரை வெளியேற்றாமலும் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. மேலும், குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரால், கொசுக்கள் அதிகளவில் உருவாகியுள்ளது. இதனால், நுாலகத்திற்கு வரும் வாசகர்கள் மற்றும் பயணியருக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம், குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, கழிவுநீர் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை