உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதுார்மேடு நெடுஞ்சாலையில் பூட்டி கிடக்கும் சோதனைசாவடி

புதுார்மேடு நெடுஞ்சாலையில் பூட்டி கிடக்கும் சோதனைசாவடி

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து, ஆந்திர மாநிலம், சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது புதுார்மேடு கிராமம். புதுார்மேடு பகுதியில் இருந்து தேவலாம்பாபுரம் வழியாகவும், ஆந்திர மாநில கிராமங்களுக்கு தார் சாலை வசதி உள்ளது.இந்த மார்க்கமாக ஆந்திர மாநிலம், அய்யன் கண்டிகை மலைப்பகுதியில் இருந்து சாராயம் கடத்தப்பட்டு, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரு மாநில போலீசார் இணைந்து சாராய வேட்டை நடத்திய சம்பவங்களும் உண்டு.இந்நிலையில், புதுார்மேடு பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடி, சில ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அலமாக்க பிரிவு போலீசார், ஆந்திர மாநிலம், நகரியில் இருந்து, திருத்தணி வரும் மாநில நெடுஞ்சாலையில் தொடர்ந்து சோதனை நடத்தி போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.அதேபோல, ஆந்திர மாநிலத்தின் மற்றொறு பிரதான சாலையாக உள்ள சித்துார் சாலையில், புதுார் மேடு சோதனைச்சாவடியிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை