உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

திருவள்ளூர்:எடைகுறைவாக பிறந்த குழந்தைக்கு, திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின், மருத்துவர்கள் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த, கீழப்பூடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மேரி - மணிகண்டன் தம்பதி. இவர்களுக்கு, திருத்தணி அரசு மருத்துவமனையில், கடந்த அக்.9ம் தேதி, 28 வாரத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. ஒரு கிலோ எடையுடன் பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருந்ததால், மருத்துவர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இங்கு, குழந்தை நல மருத்துவ துறை தலைவர் மருத்துவர் ஸ்டாலின் தலைமையிலான மருத்துவ குழுவினர், எடைகுறைவாக பிறந்த குழந்தைக்கு சிறப்பு தொடர் சிகிச்சை அளித்தனர்.செயற்கை சுவாசம், சுவாச பிரச்னைக்கான மருந்துகளும், ரத்தம் ஏற்பட்டு, தொடர்ந்து 54 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், விழித்திரை பரிசோதனை, காதுக்கான மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இதன் பயனாக, குழந்தை 1.27 எடையுடன் நலமடைந்தது.இதையடுத்து, மருத்துவ கல்லுாரி முதல்வர் ரேவதி, கூடுதல் நிலைய மருத்துவ அலுவலர் பிரபுசங்கர், கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு மற்றும் மருத்துவ குழுவினர் அக்குழந்தையை பெற்றோருடன் நேற்று வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ