மேலும் செய்திகள்
பொத்தேரி ஏரியில் ஆண் சடலம் மீட்பு
08-Aug-2025
திருத்தணி, திருத்தணி அருகே ஏரியில் மிதந்த ஆண் சடலத்தை மீட்ட போலீசார் விசாரிக்கின்றனர். திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளியம்மாபுரம் ஏரியில் நேற்று, 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
08-Aug-2025