மேலும் செய்திகள்
சிறுமிக்கு தொந்தரவு சிறுவன் மீது 'போக்சோ'
19-May-2025
திருத்தணி:அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவரது வீட்டின் அருகே உள்ள கார்மென்ட்ஸ்சில் வேலை செய்து வருபவர் ரோஸ், 22. இவர்கள் இருவரும், இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு 'ரீல்ஸ்' செய்து வந்தனர். சில மாதங்களுக்கு முன், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்தனர்.இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன், ரோஸ் இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவிற்கு, சிறுவன் திட்டி 'கமென்ட்' செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரோஸ், தன் நண்பர்கள் சுசீல், லோகேஷ் ஆகியோருடன் திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சி சரஸ்வதி மில் அருகே வந்தனர். மொபைல் போனில் தொடர்பு கொண்டு, சிறுவனை அங்கு வரவழைத்து, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் தலையில் படுகாயம் அடைந்த சிறுவன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து சுசீலை கைது செய்து, லோகேஷ், ரோஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
19-May-2025