டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது
பொதட்டூர்பேட்டை நீர்வரத்து கால்வாயில் இருந்து, டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொடிவலசா ஏரியின் நீர்வரத்து கால்வாயில் மணல் எடுத்து கடத்துவதாக, பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், நீர்வரத்து கால்வாயில் இருந்து மணல் கடத்தி சென்று கொண்டிருந்த டிராக்டரை மடக்கி பிடித்தனர். கொடிவலசா காலனியைச் சேர்ந்த பாஸ்கர், 45, என்பவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.