உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையை கடக்க முயன்றவர் ஸ்கூட்டர் மோதி உயிரிழப்பு

சாலையை கடக்க முயன்றவர் ஸ்கூட்டர் மோதி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி:தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 'பொக்லைன்' ஆப்பரேட்டர், ஸ்கூட்டர் மோதி உயிரிழந்தார். ஸ்கூட்டரில் பயணித்த இருவரும் காயமடைந்தனர். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகர் பார்தி, 23. கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் பகுதியில், பொக்லைன் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், பெருவாயல் சந்திப்பு பகுதியில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை நடந்தபடி கடக்க முயன்றார். அப்போது, கவரைப்பேட்டையில் இருந்து தச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்த 'வெஸ்பா' ஸ்கூட்டர் மோதியது. துாக்கி வீசப்பட்ட சாகர் பார்தி, பலத்த காயங்களுடன் பொன்னேரி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், ஸ்கூட்டரில் பயணித்த, மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் அக்ரிர்கான், 35, அனி, 26, ஆகியோர் காயங்களுடன், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை