5 ஆண்டுகளாக தேடப்பட்டவர் கைது
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே மங்காவரம் கிராமத்தில், கடந்த 2020ம் ஆண்டு, 1,700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் ஒருவரை கைது செய்தனர்.இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மங்காவரம் கிராமத்தைச் சேர்ந்த அமர்நாத், 26, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.