உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் மீஞ்சூர் கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் மீஞ்சூர் கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

மீஞ்சூர் மீஞ்சூர் பேரூராட்சியில், கடந்த 2022ல் நடந்த தேர்தலின்போது, தலைவர் பதவிக்கு, தி.மு.க., நகர செயலர் மோகன்ராஜ் மனைவி ருக்மணி, முன்னாள் தி.மு.க., அமைச்சர் சுந்தரம் மருமகள் சுமதி ஆகியோர் போட்டியிட்டனர்.தி.மு.க., தலைமை சுமதியின் பெயரை அறிவித்திருந்தது. ஆனால், தன் ஆதரவு கவுன்சிலர்கள் போட்ட ஓட்டுக்களால் வெற்றி பெற்ற ருக்மணி, தற்போது பேரூராட்சி தலைவராக உள்ளார்.

௯ கவுன்சிலர்கள்

இந்நிலையில், நேற்று மாதாந்திர கூட்டத்திற்கு, தி.மு.க., - காங்., - வி.சி., உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலகம் வந்தனர்.அப்போது, தேர்தலின் போது தி.மு.க., தலைமை அறிவித்த தலைவர் வேட்பாளரான சுமதிக்கு ஆதரவாக செயல்பட்ட ஒன்பது கவுன்சிலர்களின் வார்டுகள் புறக்கணிக்கப் படுவதாகவும்,அதனால் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனவும் கூறி, அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

ஆதரவாளர்கள்

இது குறித்து, பேரூராட்சி காங்., கவுன்சிலர் துரைவேல் பாண்டியன் கூறியதாவது:தலைவருக்கு ஆதரவாக உள்ளவர்களின் வார்டுகளில், சாலை, மழை நீர் வடிகால், குடிநீர் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடக்கின்றன.தி.மு.க, தலைமை அறிவித்த தலைவருக்கு ஆதரவாக ஓட்டு போட்ட காரணத்தால், எங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன.எனது வார்டில், பேரூராட்சி அலுவலகம், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நுாலகம் உள்ளிட்டவை அமைந்து உள்ளன.இந்த சாலை, மூன்று ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல், குண்டும், குழியுமாக இருக்கிறது. அதற்கு தீர்வே இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.அதே நேரத்தில், குற்றச்சாட்டு முன்வைத்த கவுன்சிலர்களின் வார்டுகளில், பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று உள்ளதாகவும், ஒப்பந்தப் பணி கோருவதில் பிரச்னை ஏற்பட்டது.இது தொடர்பாகவே, தற்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைப்பதாகவும், பேரூராட்சி தலைவரின் ஆதரவு கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி, அலுவலக வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ