மேலும் செய்திகள்
பெத்திக்குப்பத்தில் 29ல் மக்கள் தொடர்பு முகாம்
22-Jan-2025
திருவள்ளூர்:தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திருவள்ளூரில் வரும் 30ல் ஆய்வு நடத்த உள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 30ம் தேதி ஆய்வு நடத்த உள்ளார்.அப்போது, சிறுபான்மையின சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை, காலை 10:30 மணியளவில் சந்தித்து, ஆலோசனை நடத்த உள்ளார்.இதில், சிறுபான்மையினர் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் சந்தித்து, தங்களது குறை மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
22-Jan-2025