உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் பருவமழையால் 338 ஏக்கர் பயிர் சேதம்

திருத்தணியில் பருவமழையால் 338 ஏக்கர் பயிர் சேதம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சம்பா பருவத்தில், 1,509 ஏக்கர் பரப்பில் நெல் பயிரும், 500 ஏக்கர் பரப்பில் பயிறு வகை பயிர்களும் செய்துள்ளனர்.இந்நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் 'பெஞ்சல்' புயலால் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெல், வேர்க்கடலை மற்றும் பயிறு வகை பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வேளாண் துறை அதிகாரிகள் நேரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணிகள் நடத்தினர்.இதில், நெல் பயிர் மட்டும், 299 ஏக்கரும், பயிறு வகைகள், 40 ஏக்கர் பரப்பில் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதை கண்டறிந்து வேளாண் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர்.ஒரு ஏக்கருக்கு, 17,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளன. ஆனால், இரு மாதங்கள் ஆகியும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காததால், மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ