வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோவை has full of such type of roads only for past 4 years
கும்மிடிப்பூண்டி:பெத்திக்குப்பம் சந்திப்பில் கால்வாய் அமைத்த இடத்தில் பணிகள் முழுமை பெறாததால், கரடு முரடாக உள்ள சாலையை தடுமாற்றத்துடன் வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர்.சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் சந்திப்பு உளளது. இச்சந்திப்பில், இரு ஆண்டுகளுக்கு முன் கால்வாய் அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டது.கால்வாய் பணிகள் நிறைவு பெற்றதே தவிர, அதன் மீது சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால், அப்பகுதி சமமாக இல்லாமல், கரடு முராக காட்சியளிக்கிறது.இதை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.எனவே, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, உடனடியாக அப்பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை has full of such type of roads only for past 4 years