உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 10 ஆண்டுகளாக நெ.சா.துறை பாராமுகம் உயிர் பயத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்

10 ஆண்டுகளாக நெ.சா.துறை பாராமுகம் உயிர் பயத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்

பொன்னேரி, மே 20-பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள இடையன்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தாங்கல் பெரும்புலம் கிராமத்திற்கு செல்லும் 5 கி.மீ., ஒன்றிய சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.சாலை முழுதும் சரளை கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் மோசமான நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணம் செய்து வருகின்றனர். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்டவை வருவதற்கு கூட தயங்குகின்றன.இச்சாலை, 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சேதமான நிலையில் இருப்பதால் இடையன்குளம், தாங்கல்பெரும்புலம் கிராமங்களை சேர்ந்தவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:பெரும்புலம் சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இச்சாலை வழியாக செல்லும் போது, வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு, பொன்னேரி மற்றும் பழவேற்காடு ஆகிய பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டும்.வேறுவழியின்றி உயிரை பணயம் வைத்து இச்சாலையில் பயணிக்கிறோம். கடைக்கோடி கிராமமாக இருப்பதால் யாரும் கண்டுகொள்வதில்லை. எனவே, சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை