மேலும் செய்திகள்
மாறம்பேடு சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
08-Sep-2025
பொன்னேரி:காட்டுப்பள்ளி - மாமல்லபுரம் இடையே அமைந்து வரும் சென்னை எல்லை சாலை திட்டத்திற்காக, மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிப்பதுடன், மூச்சு திணறலுக்கும் ஆளாகின்றனர். மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி - மாமல்லபுரம் வரை, 132.8 கி.மீ.,க்கு, சென்னை எல்லை சாலை திட்ட பணிகள் ஐந்து பிரிவுகளாக நடந்து வருகின்றன. முதல் பிரிவானது, காட்டுப்பள்ளியில் துவங்கி கல்பாக்கம், நாலுார், வன்னிப்பாக்கம், நெடுவரம்பாக்கம், பஞ்செட்டி கிராமங்கள் வழியாக சென்று, தச்சூரில் உள்ள சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இதற்காக, தேவையான இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வன்னிப்பாக்கம் அருகே மேம்பாலம் மற்றும் இணைப்பு சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக கொண்டு வரப்படும் சாம்பல் கழிவுகள், சவுடு மண் ஆகியவை சாலை மற்றும் அதன் ஓரங்களில் பரவிக் கிடக்கின்றன. இப்பகுதியை கடக்கும் வாகனங்கள், அங்குள்ள சாம்பல் கழிவுகள் மற்றும் சவுடு மண் மீது வேகமாக செல்கின்றன. இதனால், சாலையை மறைக்கும் அளவிற்கு புழுதி பறக்கிறது. பின்னால் வரும் வாகனங்கள் நிலை தடுமாறுகின்றன. மேலும், இருசக்கர வாகனங்களில் வருவோரின் முகத்தில் பட்டு, அவர்கள் சிரமத்திற்கும், மூச்சு திணறலுக்கும் ஆளாகி வருகின்றனர். புழுதியால் தடுமாறும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் வாய்ப்புகள் உள்ளன. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல், பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
08-Sep-2025