உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் மண் படலம் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் மண் படலம் வாகன ஓட்டிகள் அவதி

திருமழிசை:சென்னை பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்த்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலையில் மீடியன் மற்றும் இணைப்பு சாலை பகுதியில் உள்ள இரு பகுதியிலும் வண்டல் மண் படலம் அதிகமாக உள்ளது. மணல் திட்டு போல் காட்சியளிக்கும் இந்த படலம் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. சில இடங்கள் இவ்வாறு தேங்கியுள்ள வண்டல் மண் படலத்தில் செடிகளும் வளர்ந்துள்ளன. அப்பகுதியை கனரக வாகனங்கள் கடந்து செல்லும் போது புழுதி பறப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதோடு சில நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர் சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் படிந்துள்ள வண்டல் மண் படலம் மற்றும் செடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !