உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பழவேற்காடு முகத்துவாரத்தில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

 பழவேற்காடு முகத்துவாரத்தில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

பழவேற்காடு: பழவேற்காடு முகத்துவாரம் அருகே கரை ஒதுங்கிய மர்ம பொருளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழவேற்காடு முகத்துவாரம் அருகே ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் நிறத்திலான மர்ம பொருள் ஒன்று நேற்று கரை ஒதுங்கி இருந்தது. அதை கண்ட மீனவர்கள், திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், அதை கைப்பற்றினர். கடலில் நில அதிர்வை கண்டறியும் மிதவை கருவியாக இருக்கலாம் என, கூறப்படுகிறது. செங்கல்பட்டு அடுத்த முருகமங்கலம் பகுதியில் உள்ள வெடிபொருள் பாதுகாப்பு கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ