உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்ணை தாக்கிய மூவருக்கு வலை

பெண்ணை தாக்கிய மூவருக்கு வலை

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த பெருமாநல்லூர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி மாதவி, 42. நேற்று முன்தினம் இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய், 22, ரஜினி, 21, வினோத், 23, ஆகியோர் மாதவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கணவன் மணிகண்டன் குறித்து கேவலமாக பேசியுள்ளனர். இதை கேட்ட மாதவியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து மாதவி, பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார், கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை