நெடுஞ்சாலையில் வேகத்தடையில்லை விபத்து அபாயத்தில் மாணவர்கள்
திருவள்ளூர்: திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள, திருமழிசையில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளி.இந்த பள்ளியில் சுற்றி யுள்ள பகுதிகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்படித்து வருகின்றனர்.இந்த பள்ளி அமைந்துள்ள நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து, கனரக, இலகு ரக வாகனம், இரு சக்க வாகனம் என தினமும் 10,௦௦௦க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.பள்ளி அருகே வேகத்தடை இல்லாததால்பள்ளிக்கு வரும் மாணவ, - மாணவியர் விபத்தில்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ - மாணவியர் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.பள்ளி அருகே வேகத் தடை அமைக்க கோரி மாணவ - மாணவியரின் பெற்றோர் பலமுறை கோரிக்கை அளித்தும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகள்எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றகுற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் மாணவ - மாணவியரின் நலன் கருதி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளி அருகே, நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.