உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வனப்பகுதியில் மக்காத கழிவுகள் மரங்கள் வளர்ச்சி பாதிப்பு

வனப்பகுதியில் மக்காத கழிவுகள் மரங்கள் வளர்ச்சி பாதிப்பு

சோழவரம்:சோழவரம் அடுத்த அட்டப்பாளையம், அல்லிமேடு கிராமங்களில் வனத்துறைக்கு சொந்ததமான காப்பு காடுகள் உள்ளன. இங்கு பல்வேறு வகையான மரங்களும், சில காட்டு விலங்குகளும் உள்ளன.மேற்கண்ட வனப்பகுதியில் தனியார் நிறுவனங்களில் கழிவுகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டு, இரவு நேரங்களில் அவை எரிக்கப்படுகின்றன.இது குறித்து நம் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அச்சமயங்களில் அங்குள்ள பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட மக்காத பொருட்களுடன் இருக்கும் கழிவுகளை மண்மை தோண்டி புதைத்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால் வனப்பகுதியின் மண்வளம் பாதித்து வருகிறது. குப்பை கழிவுகள் கொட்டி எரிக்கப்படும் இடங்களிலும், மண்ணை தோண்டி புதைத்த இடங்களிலும் புதியதாக எந்தவொரு மரச்செடிகளும் வளரவில்லை.வனப்பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் மண்வளம் பாழாகி, அப்பகுதியில் இருக்கும் மரங்களின் வளர்ச்சியும் பாதித்து வருகிறது.வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில், வனத்துறை, சோழவரம் ஒன்றிய நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் குப்பை கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை