| ADDED : ஜன 31, 2024 11:44 PM
கடம்பத்துார்:திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறை மேற்கு பிரிவின் பராமரிப்பில் உள்ளது, திருப்பாச்சூர் - கடம்பத்துார் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலை.மாவட்டத்தின் 4/6 - 6/2 கி.மீ., வரை உள்ள முக்கிய சாலையில், 2023 - 24ம் ஆண்டு விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு இடையூறாக நெடுஞ்சாலைத் துறை எல்லையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தற்காலிக கூரைகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை வாயிலாக 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், காவல் துறை, வருவாய்த் துறை ஒத்துழைப்புடன் அகற்றப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.