உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழைய மர கிடங்கு தீக்கிரை

பழைய மர கிடங்கு தீக்கிரை

ஆவடி:ஆவடி, காந்தி நகரைச் சேர்ந்தவர் அய்யப்பன், 50. இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக, ஆவடி கண்ணப்பாளையம் சாலையில், பழைய மரப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.அதேபோல், ரயில்வேயிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில், பழைய பிளைவுட் வாங்கி, 'கான்கிரீட்' பணிகளுக்கு விற்று வருகிறார்.நேற்று மதியம், குடோன் உள்ளே இருந்த அறையில் மின் கசிவு ஏற்பட்டு, மரப்பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன.தகவலறிந்து வந்த ஆவடி, பூந்தமல்லி மற்றும் அம்பத்துார் தீயணைப்பு துறையினர், 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய மரப் பொருட்கள், தீயில் எரிந்து நாசமாகின. ஆவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !