உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 52 பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

52 பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

கும்மிடிப்பூண்டி, தமிழக அரசின் விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுதும், 1,000 புதிய பள்ளி வகுப்பறை கட்டடங்கள் நிறுவப்பட்டன.திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பூந்தமல்லி, பூண்டி, திருத்தணி உள்ளிட்ட 14 ஒன்றியங்களில் உள்ள, 52 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், புது பொலிவுடன், வகுப்பறை கட்டடங்கள் நிறுவப்பட்டன.ஒவ்வொரு கட்டடமும், 28 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக இருந்தன. தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட, 1,000 பள்ளி வகுப்பறை கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.அந்தந்த பள்ளி வளாகங்களில் நடந்த திறப்பு விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊராட்சி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி