உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.25 லட்சத்தில் பூங்கா கரகம்பாக்கத்தில் திறப்பு

ரூ.25 லட்சத்தில் பூங்கா கரகம்பாக்கத்தில் திறப்பு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே தேவந்தவாக்கம் ஊராட்சி, கரகம்பாக்கம் கிராமத்தில் தமிழக அரசின் காடு வளர்ப்பு திட்டத்தின் வாயிலாக, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மரகத சோலை பூங்கா அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.செங்குன்றம் வன சரகர் கிளமென்ட் எடிசன் தலைமை வகிக்க, ஊராட்சி தலைவர் செல்வி வரவேற்றார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில், கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் பங்கேற்றார்.அதன்பின் எம்.எல்.ஏ., பேசியதாவது:தமிழகத்தில், 33 சதவீத அளவிற்கு காடுகளை பெருக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக முதல்வர் இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். இங்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைந்துள்ள பூங்காவில், 40 வகையான செடிகள் நட்டு வளர்க்கப்பட உள்ளன.அடுத்த ஐந்து ஆண்டுகளில் செடிகள் நன்றாக வளர்ந்து, அதன் மூலம் பெறப்படும் ஆக்சிஜனால் சுத்தமான காற்று கிடைக்கும். சிறுவர் - சிறுமியருக்கு சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ