உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புட்லுார் அம்மன் கோவில் எதிரில் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு

புட்லுார் அம்மன் கோவில் எதிரில் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு

திருவள்ளூர், புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில், வணிக வளாகம் கட்டுவதற்கு அப்பகுதி கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருவள்ளூர் அடுத்த, புட்லுாரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் வார விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.கோவில் வாசலில், பூ, பழம், விபூதி, குங்குமம், வளையல் போன்ற கோவிலுக்கு தேவைப்படும் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.இந்த நிலையில் இந்தக் கோவில் வளாகத்தில், 1.76 கோடி ரூபாய் மதிப்பில், புதிய வணிக வளாகம் கட்டப்படுவதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவித்துள்ளது.இதனால் கோவில் வாசலில் உள்ள கடைகள் மற்றும் ஒரு சில குடியிருப்புகள் அகற்றப்பட உள்ளதாக தெரிகிறது.இதனால் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் கோவில் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களுக்கு மாற்று இடம், கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ