மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 55; அவருக்கு சொந்தமான நிலத்தில், ஏர்டெல் மொபைல்போன் டவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.டவர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, 40 பேர் நேற்று மாலை, அப்பகுதியில் உள்ள ஏனாதிமேல்பாக்கம் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரவணகுமாரி, டி.எஸ்.பி., ஜெய்ஸ்ரீ ஆகியோர் சமாதானம் பேசினர்.இரு தரப்பினரை அழைத்து பேச்சு நடந்தி தீர்வு காணப்படும், அதுவரை டவர் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின், கிராமத்தினர் கலைந்து சென்றனர்.