உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் மழையால் மூழ்கிய நெற்பயிர்கள்

திருத்தணியில் மழையால் மூழ்கிய நெற்பயிர்கள்

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் மூழ்கின.திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில், 1,550 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெற்பயிரிட்டுள்ளனர். பெரும்பாலான நெற்பயிர் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. சில விவசாயிகள் நெல் அறுவடை செய்தும் வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணி முதல் நேற்று அதிகாலை, 3:00 மணி வரை தொடர்ந்து திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த மழை பெய்தது.இதனால் பெரியகடம்பூர், சின்னகடம்பூர், கன்னிகாபுரம், எஸ்.அக்ரஹாரம், செருக்கனுார் மற்றும் கிருஷ்ணசமுத்திரம் ஆகிய பகுதியில் நெற்பயிரில் மழைநீர் தேங்கியுள்ளது.சில இடங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிரிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் செய்வது அறியாமல் அச்சத்தில் உள்ளனர்.இது குறித்து திருத்தணி வேளாண் உதவி இயக்குநர் பொறுப்பு பிரேம் கூறியதாவது: விவசாயிகள் வயல்வெளியில் மழைநீர் தேங்கியிருந்தால், கால்வாய் அமைத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்பயிரில் தண்ணீர் இருந்தால் உடனே வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை