உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் 15ல் பங்குனி விழா துவக்கம்

ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் 15ல் பங்குனி விழா துவக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவில். இங்கு வரும் 15ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக வரும் 14ம் தேதி விநாயகர் உற்சவம் நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 21ம் தேதி காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் நடைபெறும்.மாலை 5:00 மணிக்கு வசந்த மண்டபம் எழுந்தருளலும், இரவு 8:00 மணிக்கு மேல் வசந்த மண்டபத்திலிருந்து கோவிலுக்குள் எழுந்தருளலும் நடைபெறும். வரும் 24ம் தேதி காலை நடராஜர் தரிசனமும், மாலை திருக்கல்யாணமும், இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவமும் நடைபெறும். வரும் 29ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை