உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடியில் வடமாநில ரயில்கள் நின்று செல்ல பயணியர் கோரிக்கை

கும்மிடியில் வடமாநில ரயில்கள் நின்று செல்ல பயணியர் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், வடமாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வடமாநில தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில்களின் முனையமாக உள்ளது. மேலும், இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாய் செலவில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 330 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில், ஆந்திரா, ஒடிசா, பீஹார், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்களில் பலர், கும்மிடிப்பூண்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள், சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமெனில், 45 கி.மீ., தொலைவில் உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல வேண்டும்.சென்னை சென்ட்ரலில் அவர்கள் பயணிக்கும் விரைவு ரயில்கள், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் வழியாக தான், செல்கின்றன. தற்போது கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சர்க்கார் விரைவு ரயில் மட்டுமே நின்று செல்கிறது. கும்மிடிப்பூண்டி மார்க்கமாக வடமாநிலங்களை இணைக்கும் முக்கிய விரைவு ரயில்கள் மட்டும், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று சென்றால், வடமாநில தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலையும் தவிர்க்க முடியும். அனைத்து நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், விரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வடமாநில தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி