மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
11 hour(s) ago
100 நாள் வேலைக்கு கட்டிங் :கலெக்டர் அலுவலகத்தில் மனு
11 hour(s) ago
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
இன்று இனிதாக திருவள்ளூர்
29-Dec-2025
ஆவடி: ஆவடி ரயில் நிலையத்தில், கடந்தாண்டு 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நடைமேம்பாலம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில், சென்னை -- அரக்கோணம் இடையே மின்சார ரயில்கள் செல்லும் முதல் மற்றும் இரண்டாம் நடைமேடையில் உள்ள பழைய நடைமேம்பாலத்தை இடிக்கும் பணி, நேற்று முன்தினம் இரவு துவங்கியது. இந்த பணிகள், இரவு 10:00 மணி முதல் நேற்று அதிகாலை 4:30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் இரவு 10:00 மணி முதல் நேற்று காலை 6:30 மணி வரை பணிகள் நடைபெற்றன. இதனால், சென்னை மற்றும் அரக்கோணம் மார்க்கமாக செல்லும் 15க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில், நேற்று காலை 6:30 மணி முதல் 7:00 மணி வரை, அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் இயக்கப்பட்டன.இந்த மின்சார ரயில்கள், பட்டாபிராம் -- பட்டரைவாக்கத்துக்கு இடையே எந்த ரயில் நிலையங்களிலும் நிற்கவில்லை. இதனால், நேற்று காலை நேரத்தில் ரயில் நிலையம் வந்த பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர். பின், பயணியர் பேருந்துகளில் பயணம் செய்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
29-Dec-2025
29-Dec-2025