உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடில் பேவர் பிளாக் சாலை

திருவாலங்காடில் பேவர் பிளாக் சாலை

திருவாலங்காடு: திருவாலங்காடு ஊராட்சி பெரிய தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அச்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 16 லட்சம் ரூபாய் மதிப்பில் 'பேவர் பிளாக்' சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை நேற்று திருவாலங்காடு ஒன்றிய சேர்மன் ஜீவா பூமி பூஜை போட்டு துவங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை