உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தீர்த்தீஸ்வரர் கோவிலில் நாளை பவித்ர உத்சவம் துவக்கம்

தீர்த்தீஸ்வரர் கோவிலில் நாளை பவித்ர உத்சவம் துவக்கம்

திருவள்ளூர்:தீர்த்தீஸ்வரர் கோவிலில், பவித்ர உத்சவம் நாளை துவங்கி, ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. திருவள்ளூர், திரிபுர சுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பவித்ர உத்சவம் நாளை துவங்கி, தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. தினமும் காலை 8:00 மற்றும் மாலை 5:00 மணிக்கு மேல், தீர்த்தீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும். யாகசாலையில், இரு வேளைகளிலும், மண்டப பூஜை, வேதிகார்ச்சனம், மண்டல ஆராதனம், யாக வேள்வி, பவித்ர சமர்ப்பணம் மற்றும் பூர்ணாஹூதி நடைபெறும். வரும், 6ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு, அதிரச அலங்காரம் மற்றும் இரவு 9:00 மணிக்கு மேல், பவித்ர உத்சவம் நிறைவு விழா மற்றும் பூர்ணாஹூதி நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ