உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையை ஆக்கிரமித்த கார்களுக்கு அபராதம்

சாலையை ஆக்கிரமித்த கார்களுக்கு அபராதம்

சென்னை: நுங்கம்பாக்கம் கல்லுாரி சாலையில், பிரபல தனியார் கல்லுாரி உள்ளது. இங்கு, மாணவர்களின் பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க, நுாற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடினர்.இதனால் வாகனங்கள் நிறுத்துவதற்கென கல்லுாரி வளாகத்திற்குள் போதிய இடம் இல்லாததால், கல்லுாரி சாலையில், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட இவ்வாகனங்களால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.தகவலறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு கார்களுக்கு தலா, 600 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், கார்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதை அடுத்து, போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ