உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.10 லட்சத்தில் அமைத்த சாலையில் மழைநீர் தேங்குவதால் மக்கள் அதிருப்தி

ரூ.10 லட்சத்தில் அமைத்த சாலையில் மழைநீர் தேங்குவதால் மக்கள் அதிருப்தி

திருவாலங்காடு திருவாலங்காடு சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல, 10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் கல் சாலையில் மழைநீர் தேங்குவதால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளம் பின்புறம் சார் - பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. சார் - பதிவாளர் அலுவலக சாலை, மண் சாலையாகவும், குண்டும் குழியுமாகவும் இருந்ததால், பத்திரப்பதிவுக்கு வருவோர் கடும் அவதிப்பட்டு வந்தனர். எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 2023ம் ஆண்டு, 9.83 லட்சம் ரூபாய் மதிப்பில், 200 மீட்டருக்கு திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், சாதாரண மழைக்கே சாலையில் குளம் போல் மழைநீர் தேங்குகிறது. இதனால், விரைவில் சாலை சேதமடையும் அபாயம் உள்ளது. முறையாக சாலை அமைக்கவில்லை என, அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சிமென்ட் கல் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி