உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடியிருப்பில் மழை நீர் தேக்கம் எம்.எல்.ஏ.,விடம் மக்கள் புகார்

குடியிருப்பில் மழை நீர் தேக்கம் எம்.எல்.ஏ.,விடம் மக்கள் புகார்

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துரங்கன் நகர் பகுதியில், நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, மோட்டார் மற்றும் கால்வாய் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், மழை நீர் தேங்கிய பகுதியை, பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி அதிகாரிகளுடன் சென்று, நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. மழை நீர் வடிகால்வாய்களை துார்வாரி, குடியிருப்பு பகுதியில் மீண்டும் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் தெரிவித்தனர். அப்போது, விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும் எனக்கூறி எம்.எல்.ஏ., புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை